ஓசூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் கடைக்குச் சென்றிருந்தார். அப்போது, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, சிறுமியின் தந்தையின் தம்பியான சிவகுமார் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இந்நிலையில், கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியின் தாய், நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் சிவகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஓசூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சித்தப்பா போக்சோவில் கைது
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓசூர் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக, அவரது சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




