தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டி விலக்கில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த பூமி ராஜா, கோட்டையன் ஆகியோரைப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில், அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் டிரம்மில் ரூ.2.75 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து, போலீசார் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஆந்திர மாநிலம், பதகிரியைச் சேர்ந்த சூரி என்பவரிடம் கஞ்சாவை வாங்கி, விற்பனைக்காக தேனி மாவட்டத்திற்குக் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், இவர்கள் மீது மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போடி அருகே கஞ்சா கடத்திய இருவர் கைது - 22 கிலோ கஞ்சா பறிமுதல்
போடி அருகே 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, போலீசார் 22 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




