சேலம் மாநகராட்சியின் தாகூர் தெரு, குமரன் நகர் தெருக்கள் மற்றும் அம்பாள் ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நேற்று காலை காலிக் குடங்களுடன் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஆணையர் லலித் ஆதித்ய நீலம் அவர்களிடம், குடிநீர் எப்போது வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஆணையர், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அங்கு வந்த திமுக கவுன்சிலர்களும் கொண்டலாம்பட்டி மண்டலத்தின் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகத் தாமதத்தைச் சரிசெய்யக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சேலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் - காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை
சேலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேலத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




