அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் செப்டிக் டேங்க் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர், உயிரிழந்த உடல்களை பெற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள், போலீசார் தடுத்ததையும் மீறி அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
செப்டிக் டேங்க் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலார்கள் பலி
அரியலூரில் செப்டிக் டேங்க் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர்.
அரியலூரில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




