விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். நான்கு மாதங்களில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, களத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர் என அவர் கூறினார். மேலும், அண்ணாதுரை, ஈவெரா ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக வைத்திருந்தவர்கள், தற்போது அவர்களை தூக்கி எறிந்துவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொள்கைத் தலைவராக வைத்துக்கொள்ளலாம். அப்பாவும், பையனும் அதே பாணியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை அமைச்சர் கீர்த்தனா கடுமையாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து, அரசின் செயல்பாடுகளில் தவறுகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டு மக்களுக்கான அரசாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொள்கைத் தலைவராக வைத்துக்கொள்ளுங்கள் — ஸ்டாலின், உதயநிதியை அமைச்சர் கீர்த்தனா கடும் விமர்சனம்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொள்கைத் தலைவராக வைத்துக்கொள்ளலாம். அப்பாவும், பையனும் அதே பாணியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை அமைச்சர் கீர்த்தனா கடுமையாக விமர்சித்தார்
அமைச்சர் கீர்த்தனா, ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொள்கைத் தலைவராக வைத்துக்கொள்ளலாம் எனக் கிண்டலாகக் கூறினார். மேலும், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:





