உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சேலத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

சேலத்தில் நடந்து சென்ற தனலெட்சுமி (52) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துத் தப்பினர். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சேலம் மாவட்டம் குகை மாரியம்மன் கோவில் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மனைவி தனலெட்சுமி. இவர் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள செல்போன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனலெட்சுமி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து தனலெட்சுமி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தனலெட்சுமி அளித்த அடையாளங்களின் அடிப்படையில் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50