சேலத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாங்கன் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். இந்நிலையில், கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலையில் செட்டிபாளையம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்த 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் சாலையில் ஆறாக வழிந்தோடியது. மேலும், அருகிலிருந்த காலி இடத்திலும் எத்தனால் தேங்கி நின்றது. இதையடுத்து எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயன திரவம் என்பதால், பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர்.இந்த தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் மற்றும் கோவை தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எத்தனால் தீப்பற்றுவதைத் தடுக்க ரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். மேலும், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
கோவை அருகே 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில், சாலையில் ரசாயனம் கொட்டியது. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கோவை செட்டிபாளையம் அருகே 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து எத்தனால் சாலையில் கொட்டியதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




