உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

ஏற்காடு அருகே தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் காதலி இறந்த துக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் காதலி இறந்த துக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
ஏற்காடு அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஸ்ரீகாந்த். இவர் ஏற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அப்போது, அவரது காதலி இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் காதலி உயிரிழந்த நிலையில், ஸ்ரீகாந்த் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீகாந்தின் தாயார் புஷ்பராணி கடைக்குச் சென்று சோடா வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீகாந்த், தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அவரது தாயார், மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீகாந்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50