உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

காஞ்சிபுரத்தில் தங்கையின் சாவுக்கு பழிவாங்க தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரத்தில் தங்கையின் தற்கொலைக்குப் பழிவாங்க தனியார் நிறுவன ஊழியர் மீரானை வெட்டிக்கொலை செய்த நந்தகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் தங்கையின் தற்கொலைக்குக் காரணம் எனக் கருதிய மீரானை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
காஞ்சிபுரத்தில் தங்கையின் சாவுக்கு பழிவாங்க தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மீரான். இவர் ஏற்கனவே திருமணமானவர். காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய சவுந்தர்யா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். பின்னர் இருதரப்பு குடும்பத்தினரும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பிரித்து வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சவுந்தர்யா சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த சவுந்தர்யாவின் சகோதரர் நந்தகுமார் நேற்று காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த மீரானை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். இதையடுத்து, தங்கையின் சாவுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50