உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கப்பலூர் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து

திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கப்பலூர் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குடோனில் தீ மளமளவென பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகிலிருந்த நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50