கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் 183 பயனாளிகளுக்கு ரூ.4,80,49,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், சி.முட்லூரில் விடுதி திறப்பு ரூ.3.96 கோடியில் 100 மாணவிகள் தங்கும் 25 அறைகள், உணவுக்கூடம், சமையலறை உள்ளிட்ட வசதிகளுடன் சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதி திறந்து வைக்கப்பட்ட நிலையில், சொரக்கல்பட்டு சிஎஸ்ஐ தேவாலய புனரமைப்புக்கு ரூ.43 லட்சம், பி.முட்லூர் கபர்ஸ்தான் சுற்றுச்சுவர், சாலைக்கு ரூ.15.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 9,10-ம் வகுப்பு மாணவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, தேவாலய புனரமைப்புக்கு ரூ.10 கோடி, 10 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி, வக்பு மானியம் ரூ.5 கோடியாக உயர்வு, பரங்கிப்பேட்டையில் ரூ.2 கோடியில் சமூகநலக் கூடம் கட்டப்படும் என்று புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிஷன் குமார், சிதம்பரம் சிவராஜ் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் தமிழ்கனி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூரில் 183 பேருக்கு ரூ.4.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
கடலூரில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி திறப்பு
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் 183 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




