விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு சென்னைக்கு செல்லாமலேயே உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைக்கும் வகையில் மரகதம் மருத்துவமனை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து புதிய மருத்துவச் சேவைகளைத் தொடங்கியுள்ளன.விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் மரகதம் மருத்துவமனையுடன் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேர அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் சென்னை காவேரி மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் டாக்டர் கிளைவ் பெர்னாண்டஸ், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் வெற்றிச்செல்வன், மரகதம் மருத்துவமனை நிர்வாகி வீரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கிளைவ் பெர்னாண்டஸ், விழுப்புரம் மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மரகதம் மருத்துவமனையுடன் இணைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டாக்டர் வெற்றிச்செல்வன், மரகதம் மருத்துவமனையில் 24 மணி நேரமும் எம்.டி. படித்த அனுபவமிக்க மருத்துவர்கள் அடங்கிய குழு பணியில் இருக்கும் என்றும், நோயாளிகள் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, தேவையான முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்கி அடுத்தகட்ட சிகிச்சையைத் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தரமான மருத்துவச் சிகிச்சை என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை, எளிய மக்களுக்கும் குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்பதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதன் மூலம் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர மற்றும் தீவிர மருத்துவச் சிகிச்சைகளுக்காக சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மரகதம் மருத்துவமனை - சென்னை காவேரி மருத்துவமனை கைகோர்ப்பு
விழுப்புரத்தில் 24 மணி நேர அவசர சிகிச்சை, நவீன ஐ.சி.யூ. வசதிகள் அறிமுகம்
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் மரகதம் மருத்துவமனையுடன் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




