தமிழக அரசால் நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படும் ரேஷன் அரிசியை, சில சமூக விரோதிகள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் அரிசியை கால்நடை மற்றும் கோழித் தீவன ஆலைகளுக்கும், மாவு அரவை ஆலைகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அதிக விலைக்கு விற்று வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வீராணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வலசையூர் பகுதியில், இரவு நேரங்களில் சரக்கு ஆட்டோக்களில் வரும் மர்ம கும்பல், குடியிருப்புவாசிகளிடம் இருந்து ரேஷன் அரிசிகளை மொத்தமாக வாங்கி வாகனங்களில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்களின் பசியைப் போக்க வழங்கப்படும் அரிசி இவ்வாறு சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க, காவல்துறையினரும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் அருகே நியாய விலை கடையில் அரிசி கடத்தல்
பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, சரக்கு வாகனங்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு காக்கப்படும் ரேஷன் அரிசி
சேலம் மாவட்டம் வலசையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சரக்கு வாகனங்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்வது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




