உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழக – கேரள எல்லை பகுதியில் போலீசார் அதிரடி

தமிழக – கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்யப்பட்டார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்துப் பணி மற்றும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கேரள மாநிலம் புஷ்பமங்களம் பகுதியைச் சேர்ந்த சாஜியின் மகன் சரத்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கனரக லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பான வீடியோவையும் தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50