உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கஞ்சா போதையில் இளைஞர் காவல் உதவி ஆய்வாளர் மீது அரிவாளால் தாக்க முயற்சி

சென்னை செங்குன்றத்தில் கஞ்சா போதையில் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்ற தினேஷை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் தகராறு செய்த தினேஷ், காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்றார். பெல்ட்டால் தற்காத்துக்கொண்ட போலீஸ் அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கஞ்சா போதையில் இளைஞசர் காவல் உதவி ஆய்வாளர் மீது அரிவாளால் தாக்க முயற்சி

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே தினேஷ் என்ற இளைஞர் கஞ்சா போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க காவல் உதவி ஆய்வாளர் முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த தினேஷ், திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றுள்ளார். இதனை எதிர்பாராத உதவி ஆய்வாளர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, தனது இடுப்பு பெல்ட்டை கழற்றி தற்காத்துக் கொண்டார். இதனால் அவர் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் அருகே காவல் அதிகாரி மீது இளைஞர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50