திமுக போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.இந்நிலையில், அவரை தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், காலில் ஏற்பட்ட காயத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, ஓய்வில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த மு.க.ஸ்டாலின், அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்திருந்தார். இதை தொடர்ந்து, ஒரே நாளில் முக்கிய அரசியல் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்
ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
காலில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினும் அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




