தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவிலை அடுத்த சமந்தனார்குடியைச் சேர்ந்தவர் ராஜாத்தி. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் யாரும் வராத நிலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் சங்கர் கணேஷ் குடும்பத்தினர் முன்நின்று அவரை அடக்கம் செய்தனர். பின்னர், அவரது நகை பணம் மற்றும் அவரது சொத்து ஆவணங்களை சங்கர்கணேஷ் குடும்பத்தினர் அபகரித்து வைத்துக்கொண்டு அதன் மூலம் போலி ஆவணங்கள் தயார் செய்து அந்த சொத்தை தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக அப்பகுதி மக்களும் அவரது உறவினர்களும் புகார் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர் சங்கர் கணேஷ் மற்றும் அவரது மனைவி வழக்கறிஞர் பத்மாவதி ஆகிய இருவரையும் நாச்சியார் கோவில் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் ராஜாத்தி உயிரிழப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சொத்து மாற்றம் குறித்து விசாரணை நடத்தினர்.
ஓய்வுபெற்ற அதிகாரியின் சொத்து அபகரிப்பு - வழக்கறிஞர் தம்பதி கைது
ஓய்வுபெ அதிகாரியின் சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக வழக்கறிஞர் தம்பதி செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற வருவாய் கோட்டாட்சியர் ராஜாத்தியின் சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறப்படும் வழக்கில், வழக்கறிஞர் தம்பதி சங்கர் கணேஷ் மற்றும் பத்மாவதி கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜாத்தியின் மரணம் மற்றும் சொத்து மாற்றம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




