திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ராக்காச்சிபுரத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது, அலைபேசி கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 5 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நத்தம் - மதுரை சாலையில் உள்ள பரளி பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த ரங்கராஜ் மற்றும் விஜய் என்பதும், சாகுல்ஹமீது வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 46 கிராம் வெள்ளி கொலுசை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து மர்மநபர்கள் 5 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் திருட்டு - இருவர் கைது
நத்தம் அருகே அலைபேசி கடை உரிமையாளர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் திருடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே அலைபேசி கடை உரிமையாளர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் திருடிய வழக்கில் மதுரையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 46 கிராம் வெள்ளி கொலுசை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




