மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் எப்.க்யூ.எல். மற்றும் விஜி செயலிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையில் 25 போலீசார், 5 குழுக்களாகப் பிரிந்து, கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், அலைபேசிகள், பத்திரங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூரில் செயலி முதலீடு மோசடி - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மதுரை மேலூரில் செயலிகளில் பல கோடி ரூபாய் முதலீடு மோசடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூரில் செயலிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை கைப்பற்றினர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
