மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாரபத்தி அண்ணாநகரைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மனைவி நாச்சம்மாள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வெளியே சென்ற இளைய மகன் மோகன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கூடக்கோவில் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த கிணறு அருகே சாக்கு மூட்டைக்குள் சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், முருகனின் உறவினர் முத்துமணி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை
திருப்பரங்குன்றம் அருகே 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினரான முத்துமணியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
