உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஒட்டன்சத்திரத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

ஒட்டன்சத்திரத்தில் அரிவாளுடன் வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த இளைஞர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஒட்டன்சத்திரத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைதுஒட்டன்சத்திரத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கையில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பயன்படுத்தி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்டது கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50