உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

தஞ்சாவூர் பூதலூரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் பூதலூரில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த மணிகண்டனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவருக்கு கூட்டாளிகள் உள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நேற்று இரவு ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர், கதவை மூடிவிட்டு பணம் வைக்கும் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சியில் அவருடன் வேறு யாராவது தொடர்புடையவர்களா, அவருக்கு ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50