உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஊத்துமலையில் தோட்டத்தில் பதுக்கிய 230 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

ஊத்துமலை அருகே கடங்கநேரி தோட்டத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 230 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி எஸ்.பி. உத்தரவின்பேரில் ஊத்துமலை போலீசார் கடங்கநேரி தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 230 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஊத்துமலையில் தோட்டத்தில் பதுக்கிய 230 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஊத்துமலையில் கடங்கநேரி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 230 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடங்கநேரியைச் சேர்ந்த வெள்ளைக்கனி, செல்வம் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் செல்வத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். 


தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50