உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தென்காசியில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது - 1.8 கிலோ கஞ்சா பறிமுதல்

தென்காசி எஸ்.பி. உத்தரவின்பேரில், மங்கம்மாள் சாலையில் 1.8 கிலோ கஞ்சாவுடன் விற்பனையாளர் எட்வின் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

தென்காசி புதிய எஸ்.பி. டாக்டர் ஆர். ஸ்டாலின் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மங்கம்மாள் சாலையில் 1.8 கிலோ கஞ்சாவுடன் எட்வின் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தென்காசியில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது - 1.8 கிலோ கஞ்சா பறிமுதல்

தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ், முதல் நாளிலேயே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவரது உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாம்பவர் வடகரை சர்ச் தெருவைச் சேர்ந்த எட்வின் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 1.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புதிய எஸ்.பி.யின் முதல் நாளிலேயே தொடங்கிய இந்த அதிரடி நடவடிக்கை, மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு போலீசாரின் கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50