உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

இலவச பேருந்து பயண திட்டத்தில் சேர்க்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர், இடைப்பாடி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
இலவச பேருந்து பயண திட்டத்தில் சேர்க்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர், இடைப்பாடி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 
தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் அவர்களின் பாதுகாவலர்களும் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மேட்டூர் ஸ்டேட் வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இதே போல் இடைப்பாடி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பேட்டரி வாகனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மனுக்களை அளித்தனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50