செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செங்குன்றம் பாரதி நகரைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ. இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும், தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்றார். அப்போது மைதானத்திற்கு செல்வதற்காக இரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் தாம்பரம் மார்க்கத்திலிருந்து வேகமாக வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு இரயில் எதிர்பாராதவிதமாக யுவஸ்ரீ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இந்த தகவலறிந்து வந்த இரயில்வே போலீசார் மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரயில் மோதி தடகள வீராங்கனை மாணவி உயிரிழப்பு
செங்கல்பட்டு அருகே இரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தடகள மாணவி யுவஸ்ரீ, விரைவு இரயில் மோதி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே இரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பிளஸ்-1 மாணவியும் தடகள வீராங்கனையுமான யுவஸ்ரீ, தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு இரயில் மோதி உயிரிழந்தார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




