தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், பெங்களூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த ஆம்னி பேருந்தை புளியங்குடி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ எடையுள்ள, ரூ. 2,600 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பேருந்து ஓட்டுநர்களான சதீஷ், சுரேஷ் மற்றும் கிளீனர் கபில் ராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்னி பேருந்தில் புகையிலைப் பொருட்கள் கடத்தல் – மூவர் கைது
பெங்களூரில் இருந்து தென்காசிக்கு ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர்கள் இருவர், கிளீனர் என மூவரைக் கைது செய்தனர்.
தென்காசி புளியங்குடியில் போலீசார் நடத்திய சோதனையில், பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2,600 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டுநர்கள் இருவர், கிளீனர் கைது செய்யப்பட்டு பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




