அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும், பட்டதாரியான வில்வேந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வில்வேந்திரன், அந்த சிறுமியுடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த மாணவி கர்ப்பமானதை அறிந்து வில்வேந்திரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருமணம் செய்ய மறுத்ததுடன், கர்ப்பத்தைக் கலைக்குமாறு வில்வேந்திரன் வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்த மாணவியின் தந்தை தனது மகளின் வாழ்க்கையைச் சீரழித்து அழித்த வாலிபர் வில்வேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மகளிர் நீதிபதி மணிமேகலை குற்றவாளி வில்வேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசின் சார்பாக ரூ. 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
அரியலூரில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபருக்கு ஆயுள் தண்டனை
அரியலூரில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் விதித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




