திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்டபோது, பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் இருப்பது தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, குடிநீர் தொட்டியில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அசுத்தமான குடிநீரை தங்களது குழந்தைகள் குடித்திருந்தால் என்னாவது என கேள்வி எழுப்பிய பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய பள்ளிக்கு காவலர்கள் நியமிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி
பழனி அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர் மலம் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே மானூர் அரசு தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர் மலம் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டி சுத்தம் செய்யப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கக் கோரி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




