உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் - தமிழக அரசு

அண்ணன் சீர் திட்டத்தில் மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்க கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் - தமிழக அரசு

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவு திட்டத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அக்டோபர் 5-ம் தேதி திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குள் வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளன. தங்க நாணயத்தின் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளில் இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தகுதி மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50