சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கோமளவல்லி. இவருக்குச் செங்கல்பட்டைச் சேர்ந்த யாஸ்மின் மற்றும் அவரது கணவர் விவேக் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளைக் குறைந்த விலைக்குப் பெற்றுத் தருவதாக இந்தத் தம்பதியினர் கோமளவல்லியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், ரூ.1.80 கோடி பணம் மற்றும் 713 கிராம் தங்க நகைகளைக் கொடுத்துள்ளார். மேலும், உறவினர் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சமும் பெற்றுள்ளனர்.பின்னர், போலி வீட்டு ஒதுக்கீட்டு ஆவணங்களைக் காட்டி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி வீடோ மருத்துவச் சீட்டோ வாங்கித் தராமல் காலம் கடத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட கோமளவல்லி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி யாஸ்மின், விவேக் ஆகியோரை முதலில் கைது செய்தனர். இதை தொடர்ந்து, மோசடிக்குத் துணையாக இருந்த நகைக்கடை உரிமையாளர் தினேஷ் சவுத்ரி மற்றும் அவரது தந்தை தேஜராம் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு, மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக ரூ.1.92 கோடி மோசடி - 4 பேர் கைது
சென்னையில் வீடு மற்றும் மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.92 கோடி மற்றும் 713 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு மற்றும் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.92 கோடி பணம் மற்றும் 713 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




