தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே லெட்சுமியூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கு வெங்கடம்பட்டி பகுதியில் 22 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்குக் கூட்டுப்பட்டா இருந்ததால், வங்கிக் கடன் பெறுவதற்காக தனிப்பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக நிலத்தை அளவீடு செய்ய வந்த விஏஓ சேர்மபாண்டியன், தனிப்பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து தாமோதரன் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனப் பொடி தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். இதை தொடர்ந்து, லஞ்சப் பணத்தை விஏஓவிடம் தாமோதரன் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டா வழங்க ரூ.4,000 லஞ்சம் – விஏஓ கைது
ஆலங்குளம் அருகே தனிப்பட்டா வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனிப்பட்டா வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் சேர்மபாண்டியன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




