திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது தந்தை பொன்ராஜ். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வாரிசு சான்றிதழ் வாங்கியுள்ளார். இதில் பொன்ராஜ் அவர்களின் மனைவியின் பெயர் தமயந்தி லட்சுமி என்பதற்கு பதிலாக தமயந்தி என மட்டும் இருப்பதால் தமயந்தி லட்சுமி என்று பெயர் மாற்றம் செய்வதற்காக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு குமார் வந்துள்ளார். அப்போது மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் தங்கவேலுடன் இது குறித்து அணுகியுள்ளார். அப்போது பெயர் மாற்றத்திற்கு ரூ.3,500 லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அவரிடம் கொடுக்கப்பட்டது. பின்பு தங்கவேலுவிடம் சென்றபோது பேரம் பேசி ரூ. 2500 ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்
வாரிசு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் கைது
திண்டுக்கல் மாநகராட்சியில் வாரிசு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ.2,500 லஞ்சம் பெற்ற சுகாதார ஆய்வாளர் தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் வாரிசு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வதற்காக ரூ.3,500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் சுகாதார ஆய்வாளர் தங்கவேலு, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




