தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் வகையில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்ய தமிழக கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேங்காய் ஆகிய 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 2.5 கிலோ எடையிலான இந்த காய்கறி தொகுப்பு, சென்னையில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், 4 நடமாடும் காய்கறி கடைகள் மூலமும் விற்பனை நடைபெற உள்ளது. நாளை முதல் 7-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் இந்த விற்பனை நடைபெறுகிறது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். காய்கறிகளை தனித்தனியாக வாங்க முடியாது,தொகுப்பாக மட்டுமே வழங்கப்படும். மற்ற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து விற்பனையை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் - வெற்றி சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்
10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் வகையில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




