உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ராசிபுரத்தில் 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல் - பெண்ணிடம் விசாரணை

ராசிபுரத்தில் 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண்ணைப் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரத்தில் கோழிப் பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காக 150 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிய பெண் அனிதாவைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ராசிபுரத்தில் 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல் - பெண்ணிடம் விசாரணை

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து கோழிப் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், ராசிபுரம் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுப்பராயன் தெரு பகுதியில் சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சுப்பராயன் தெருவைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி அனிதா என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோழிப் பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராசிபுரம் காவல் ஆய்வாளர் அனிதாவை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50