உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மூலைக்கரைப்பட்டியில் அழுகிய ஆட்டிறைச்சி விற்பனை – 250 கிலோ இறைச்சி பறிமுதல்

மூலைக்கரைப்பட்டியில் அழுகிய நிலையில் இருந்த 20 ஆடுகளின் இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியில் நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் அழுகிய இறைச்சி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதிகாரிகள் சோதனை நடத்தி 250 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மூலைக்கரைப்பட்டியில் அழுகிய ஆட்டிறைச்சி விற்பனை – 250 கிலோ இறைச்சி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் உள்ள இறைச்சிக் கடையில், நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படியில், நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின்பேரில், அதிகாரி ஜெகநாத் தலைமையிலான குழுவினர் கடை உரிமையாளர் வானமாமலை என்பவருக்குச் சொந்தமான கடை, வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தினர்.அப்போது, இரண்டு பெரிய குளிர்சாதனப் பெட்டிகளில் தோல் உரிக்கப்பட்ட நிலையில் 20 ஆடுகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் இறைச்சி அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து, 250 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்து அழித்தனர்.மேலும், இந்த இறைச்சி குறைந்த விலைக்கு ஓட்டல்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
மூலைக்கரைப்பட்டியில் அழுகிய ஆட்டிறைச்சி விற்பனை – 250 கிலோ இறைச்சி பறி | விசில் மீடியா