உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற ஆசிரியர் போக்சோவில் கைது

புளியங்குடியில் மாணவியை மிரட்டியதாகப் புகார் எழுந்த ஆசிரியர் இசை டிராவிட், 20 நாட்களுக்குப் பிறகு மயிலாடுதுறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புளியங்குடியில் மாணவியை மிரட்டி அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்த ஆசிரியர் இசை டிராவிட், 20 நாட்களுக்குப் பிறகு மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற ஆசிரியர் போக்சோவில் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக உதவி உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் இசை டிராவிட் . இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை அடிக்கடி மிரட்டி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரைத் தேடி வந்த நிலையில், போலீசாரிடம் சிக்காமல் 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில், மயிலாடுதுறையில் பதுங்கியிருந்த இசை டிராவிட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற ஆசிரியர் போக்சோவில் | விசில் மீடியா