சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் விஜயா. இவர் சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, பராமரிப்பின்றி இருந்த பாழடைந்த அறைப் பகுதிக்குச் சென்ற அவர், தரையில் மூடப்படாமல் இருந்த திறந்தவெளித் துவாரத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விஜயா வீடு திரும்பாததால் அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு இரயில் நிலையத்தின் கீழ்தளத்தில் உள்ள அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அங்கு சோதனை செய்தனர். அந்த சோதனையில் விஜயாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பாதுகாப்புக் குறைபாடு மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூர் இரயில் நிலையத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
மயிலாப்பூர் இரயில் நிலையத்தில், பாதுகாப்பற்ற திறந்தவெளித் துவாரத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் இரயில் நிலையத்தில் மாயமான விஜயா அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




