உத்திரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம், புட்டாஹேடா கிராமத்தை சேர்ந்தவர் சராபத் அலி. கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது கிராமத்தில் உள்ள மசூதிக்கு சென்றார். அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த சராபத் அலிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மசூதியிலேயே மயங்கி விழுந்தார். உடனே, அருகிலிருந்தவர்கள் சராபத் அலியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மசூதியில் தொழுகையில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். சராபத் அலி மயங்கி விழும்போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, மசூதியில் தொழுகை செய்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்த சராபத் அலி திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




