நாமக்கல் மாவட்டம் வரதராஜபுரத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மயான நிலத்தை மீட்டுத் தரக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அருந்ததியர், ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த மக்கள், சுமார் 70 சென்ட் நிலத்தைப் பூர்வீக மயானமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், 5 சென்ட் நிலம் மட்டுமே எஞ்சியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நிலத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினரின் பணிகளைத் தனிநபர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன், தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும், சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி மயான நிலத்தை மீட்டுத் தருவதுடன், புகாரில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் அருகே மயான நிலம் ஆக்கிரமிப்பு புகார் – ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
வரதராஜபுரத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் வரதராஜபுரத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. நிலத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




