கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே உள்ள டேன்மேரி செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரது மனைவி பிரியா. பிரின்ஸ் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த பிரின்ஸ் அரிவாளால் தனது மனைவி பிரியாவை வெட்டியுள்ளார்.அப்போது அங்கு வந்த பிரியாவின் தாயார் நேசம் என்பவரையும் பிரின்ஸ் அரிவாளால் வெட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் பிரியா மற்றும் நேசம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பிரியாவின் தந்தையையும் பிரின்ஸ் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீர்மேடு போலீசார், பிரின்ஸைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே பிரின்ஸ் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்துள்ளனர். இந்நிலையில், இரட்டை கொலைச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிரின்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனைவி மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர் கைது
பீர்மேடு அருகே மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாமனாரைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு அருகே மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாமனாரைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




