கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நரிக்கல்பதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று கோழிக்கூட்டுக்குள் புகுந்த ராட்சத மலைப்பாம்பு அங்கிருந்த 5 கோழிகளை விழுங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் மலைப்பாம்பைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, கோழிகளை விழுங்கியதால் மலைப்பாம்பால் உடனடியாக நகர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நகர முடியாமல் இருந்த மலைபாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து கோழிகளை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் தென்பட்டால், பொதுமக்கள் அவற்றைத் தாங்களாகவே பிடிக்க முயற்சிக்காமல் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி அருகே 5 கோழிகளை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு
நரிக்கல்பதி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ராட்சத மலைப்பாம்பு 5 கோழிகளை விழுங்கியது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நரிக்கல்பதி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ராட்சத மலைப்பாம்பு 5 கோழிகளை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




