தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கேரள மாநில கவர்னராக இருந்த ஆர்.வி.அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.தமிழகத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தின் முழுநேர கவர்னராக அர்லேகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை லோக் பவனில் கவர்னராக ஆர்.வி.அர்லேகர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, கவர்னர் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் இன்று மாலை கவர்னர் அர்லேகரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
கவர்னர் அர்லேகருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு
தமிழ்நாட்டின் கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




