திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையை அடுத்த புதூர் கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் நேற்று 20 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மலைப்பாம்பைப் பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குளத்தில் இருந்த மலைப்பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால், மலைப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு மலைப்பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிப்பட்டு அருகே குளத்தில் 20 அடி நீள மலைப்பாம்பு – பொதுமக்கள் அச்சம்
பள்ளிப்பட்டு அருகே புதூர் கிராமக் குளத்தில் 20 அடி நீள மலைப்பாம்பு காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் அதைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே புதூர் கிராமக் குளத்தில் சுமார் 20 அடி நீள மலைப்பாம்பு காணப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். தகவலறிந்த வனத்துறையினர் மலைப்பாம்பைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
