உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நீதிபதியின் மகன் கார் மோதி ஒருவர் பலி - அலட்சியம் காட்டிய 4 காவலர்கள் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் கொச்சியில், நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில், நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, காவல் ஆணையர் மாற்றப்பட்டதுடன் நான்கு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நீதிபதியின் மகன் கார் மோதி ஒருவர் பலி - அலட்சியம் காட்டிய 4 காவலர்கள் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் சேரானல்லூரில், கடந்த 24-ம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.இந்த விபத்து நடந்தபோது காரை ஓட்டியது நீதிபதியின் 17 வயது மகன் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிபதி மற்றும் அவரது மகன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கில் காவல்துறையினர் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினர். மேலும், இந்தச் சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்ற நிலையில், கொச்சி காவல் ஆணையர் காளிராஜ் மகேஷ் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆர். நிஷாந்தினி புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
நீதிபதியின் மகன் கார் மோதி ஒருவர் பலி - அலட்சியம் காட்டிய 4 காவலர்கள் | விசில் மீடியா