கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் காவல்துறையின் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி பாரதி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இரவு சுரேஷ் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதலில் அவரது மனைவியான பாரதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சுரேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த போது, அவரது கழுத்தில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, கணவரின் துன்புறுத்தல்கள் காரணமாக அவரைக் கொலை செய்ததாக பாரதி வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் தனது 14 வயது மகனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதையடுத்து பாரதியையும், கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் அவரது 14 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே ரவுடி கொலை - மனைவி, மகன் கைது
நாகர்கோவில் அருகே ரவுடி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியும் 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரவுடி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியும் 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




