கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்ஷூல் நாகர் உத்தரவின் பேரில், நாகர்கோவில் உட்கோட்ட டி.எஸ்.பி. இளஞ்செழியன் மேற்பார்வையில், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நாகர்கோவிலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய 18 ஓட்டுநர்களை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மதுபோதையில் இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். இந்தச் சோதனையின் முடிவில், விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாகர்கோவிலில் மதுபோதையில் ஓட்டிய 18 ஆட்டோக்கள் பறிமுதல் - ரூ.1.80 லட்சம் அபராதம்
நாகர்கோவிலில் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய 18 பேரின் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து, ரூ.1.80 லட்சம் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்ஷூல் நாகர் உத்தரவின்பேரில், நாகர்கோவில் டி.எஸ்.பி. இளஞ்செழியன் மேற்பார்வையில் போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய 18 பேரின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களுக்கு மொத்தம் ரூ.1.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




