உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரியாக வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனி மேற்கு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரியாக வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேலன். இவரது மனைவி சசிகலா. இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் நிரஞ்சன் குமார். இவர் திருமணமாகி அருகிலுள்ள பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சசிகலாவை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நிரஞ்சன் குமார், தனது தாய் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தென்பாகம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை மேற்கொண்டார். இதை தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் தாமிரா உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நகை, பணத்திற்காகக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெறுகிறது. கடந்த நான்கு நாட்களில் ஆறு கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரியாக வெட்டிக் கொலை – | விசில் மீடியா