உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

ஸ்ரீவைகுண்டம் அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக் கொல்லப்பட்டார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன், சுந்தர்ராஜன் ஆகியோரின் குடும்பங்களுக்கு இடையே வீட்டின் முன் கழிவுநீர் செல்வது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் போது இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதம் முற்றியதில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் மாரியப்பனின் மகனும், கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தவருமான இசக்கிராஜா சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார், இரு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு அக்டோபர் வரை 65 கொலை வழக்குகள் பதிவான நிலையில், இந்த ஆண்டு 59 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், கொலை வழக்குகள் 9.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை | விசில் மீடியா