திமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறை கேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, செப்டம்பர் 16-ஆம் தேதி அவருக்குச் சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது
ரூ.100 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




